2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கடும் போராட்டத்திற்குப் பின் இங்கிலாந்துக்கு வெற்றி

Super User   / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியை இங்கிலாந்து அணி கடும் போராட்டத்தின் பின்னர் 6 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

குழு' பி' அணிகளுக்கிடையிலான இப்போட்டி இந்தியாவின் நாக்பூர் நகரில் நடைபெற்றது. அனுபவம் குறைந்த நெதர்லாந்து அணியை இங்கிலாந்து இலகுவாக வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 292 ஓட்டங்களைக் குவித்து வியக்க வைத்தது. ரியன் டென் டச்செட் 116 ஓட்டங்களைப் பெற்றார். டொம் கூப்பர் 47 ஓட்டங்களையும் அணித்தலைவர் பீற்றர் போரென் 24 பந்துவீச்சுகளில் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அணித் தலைவர் அன்ட்ரூ ஸ்ட்ரௌஸ் 83 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பெற்றார். ஜெனாதன் ட்ரொட் 62 ஓட்டங்களைப் பெற்றார்.

நெதர்லாந்து வீரர் டென் டொச்சட் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .