2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

வன்முறை அச்சுறுத்தல் கொண்ட உலக கிண்ண பாடலுக்கு ஜனாதிபதி தடை

Super User   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்த கிரிக்கெட் உலக கிண்ண பாடல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கிணங்க தடை செய்யப்பட்டுள்ளது.

நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலிய அணி பறவைத் தீனி போன்று நொறுக்கப்படும், நியூஸிலாந்து அணியினர் தாடைகள் உடைக்கப்படும் என இப்பாடலில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

சிங்கள, தமிழ் வரிகள் கொண்ட இப்பாடலை செவிமடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இப்பாடலை ஒலிபரப்ப வேண்டாம் என அரசாங்க வானொலி தொலைக்காட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அவமதிக்கும் விதமான வரிகளை அனுமதித்தமைக்காக விளையாட்டுத்துறை அதிகாரிகளையும் ஜனாதிபதி கடிந்துகொண்டுள்ளார்.

இப்பாடல் மோசமான ரசணை கொண்டதென ஜனாதிபதி கருதுகிறார். ஏனைய நாடுகளை அவமதிக்காமல் அணியையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் பாடலை அவர் விரும்புகிறார் என ஜனாதிபதிக்கு நெருக்கமான அதிகாரியொருவர் ஏ.எவ்.பிக்கு தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0

 • xlntgson Thursday, 24 February 2011 10:40 PM

  சரிதான், உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டை ஒட்டி எடுத்த முடிவு என்றால், ஆனால் இதுவே வழமையானால் மக்களின் ரசனை என்னாவது, கருத்து சுதந்திரம் இத்யாதி விடயங்கள் யாருடைய கண்காணிப்பில் வைக்கப்படும் தணிக்கை அதிகாரி நியமிக்கப்படுவாரோ? தமிழக நடிகர் விஜய் இலங்கைக்கு எதிராக தனது கன்னிப்பேச்சில் குறிப்பிட்ட விடயங்களுக்கு எதிராக மிக கேவலமான கருத்துகள்- தகாத வார்த்தைகள் கூட பிரயோகிக்கப்பட்டிருக்கிறன என்பதை ஊடக தணிக்கை அதிகாரிகள் காணலாம். பாட்டுக்கு ஒரு நீதியா? பாடும் எல்லாரையும் தடுக்க முடியுமா? பஸ்ஸில்..

  Reply : 0       0

  Abdul Jabbar Thursday, 24 February 2011 10:41 PM

  Thanks for mailing me the breaking news of the Tamilmirror.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .