2025 ஜூலை 16, புதன்கிழமை

லசித் மாலிங்க ஹெட்ரிக் சாதனை

Super User   / 2011 மார்ச் 01 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்ய அணியுடனான உலக கிண்ணப் போட்டியில் இலங்கை வீரர் லசித் மாலிங்க சற்றுமுன் ஹெட்ரிக்  சாதனை புரிந்தார்.  உலக கிண்ண போட்டிகளில் பெறப்பட்ட 7 ஆவது ஹெட்ரிக் இதுவாகும். இவ்வருட உலககிண்ண போட்டிகளில் பெறப்பட்ட இரண்டாவது ஹெட்ரிக் சாதனை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்.பிரேமதாஸ அரங்கில் நடைபெறும்  இப்போட்டியின் 42 ஆவது ஓவரின் கடைசி பந்துவீச்சில் மிஷ்ராவை ஆட்டமிழக்கச் செய்த மாலிங்க, தனது அடுத்த ஓவரின் முதல் இரு பந்துகளிலும் முறையே  இப்போட்டியில் ஒங்கோன்டோ, என்கோச்சையும் ஆட்டமிழக்கச்செய்ததன் மூலம் ஹெட்ரிக் சாதனை புரிந்தார்.

இதற்குமுன் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரிலும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக மாலிங்க ஹெட்ரிக் சாதனை புரிந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போட்டியில் அவர் தொடர்ச்சியாக 4  பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்றைய போட்டியில் கென்ய அணி 142 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. லசித் மாலிங்க 38 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


You May Also Like

  Comments - 0

  • yusri Wednesday, 02 March 2011 04:46 AM

    மாலிங்கவுக்கு எமது வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .