Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 02 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணி வீரர்கள் மஹேல ஜயவர்தன, திலான் சமரவீர ஆகியோர் மீதான ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அரச தொலைக்காட்சி மூலம் தெரிவிக்கப்பட்ட இக்குற்றச்சாட்டு தொடர்பாக அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த பல வருடங்களாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நிலைநாட்டிய புகழுக்கு இக்குற்றச்சாட்டு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். இலங்கை அணி வீரர்களின் மனோதிடத்தையும் இது பாதிக்கும் என அவர் கூறினார்.
ஜே.வி.பியும் இக்குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இது தொடர்பாக கூறுகையில் "இலங்கை அணி சிறப்பாக செயற்படும் போதெல்லாம் அரசாங்கம் தனக்கு பெயர் தேடிக் கொள்கிறது. ஆனால் அவ்வணி தோல்வியடையும்போது, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது" என்றார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை மாற்றங்களிலும் அரசாங்கம் இதேபொன்றுதான் நடந்துகொள்கிறது. பொருட்களின் விலை குறைந்தால் அதில் அரசாங்கம் தனக்குப் பெயர் தேடிக்கொள்ளும். விலைகள் அதிகரித்தால் அதற்கான காரணத்தை மற்றவர்கள் மீது சுமத்தும் எனவும் விஜித ஹேரத் கூறினார்.
23 minute ago
35 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
8 hours ago