Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Super User / 2011 ஜூன் 14 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் நடைபெற்ற "2011 எச்.எஸ்.பி..சி. 5 நாடுகள் றக்பி சுற்றுப்போட்டி"யின் போது தாம் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக இலங்கை வீரர்கள் மூவர் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை விளையாட்டுத்துத்துறை மருத்துவப் பிரிவுப் பணிப்பாளர் டாக்டர் கீதாஞ்சன மெண்டிஸ் தெரிவித்தார்.
சாலிய குமார, கீத் குருசிங்க, எரங்க சிறிவர்தன ஆகிய 3 வீரர்கள் மேற்படி சுற்றுப்போட்டியின்போது சர்வதேச றக்பி சபையால் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து சோதனைகளில் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டபின் அவர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க கடந்த உலகக் கிண்ணப் போட்டியின்போது மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் கடந்த வாரம் தெரவித்திருந்தது.
பொதுநலவாய போட்டியில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் பெற்ற இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சி ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றதால் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Athambawa Abdul Jabbar Wednesday, 15 June 2011 03:22 PM
இப்படி எல்லாம் பறிக்கப்பட்டா மிஞ்சுறது என்ன?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
2 hours ago