2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை அனுமதிக்காதமைக்கு லலித் மோடி விவகாரம் காரணம்?

Super User   / 2011 ஜூன் 20 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கன் பிரிமியர்லீக் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிப்பதற்கு இந்திய கிரிக்கெட் (பிசிசிஐ) சபை மறுத்தமைக்குக்கு லலித் மோடி விவகாரம் காரணம்  எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூரை தளமாகக்கொண்ட சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் வென்சர்ஸ் எனும் நிறுவனத்திடம் இப்போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்க கிரிக்கெட் சபை) வழங்கியுள்ளது.

சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் நிறுவனத்திற்கும் லலித்மோடிக்கும் தொடர்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் சபை சந்தேகிப்பதாலேயே  ஸ்ரீலங்கன் பிரிமியர்லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.பீ.எல். முன்னாள் தலைவரான லலித்மோடி இப்போது பிசிசிஐயினால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'இலங்கை லீக்கின் பின்னால் மோடி இருப்பதற்கான அறிகுறிகளை நாம் கண்டுள்ளோம். ஐ.பி.எல்.லில் பணியாற்றிய அவரின் நபர்கள் பலர் இப்போது சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் வென்சர்ஸ் (எஸ்.ஈ.வி.) நிறுவனத்தின் ஊடக இலங்கை லீக்கை நிர்வகிக்கின்றனர்' என பிசிசிஐ உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளை இலங்கை கிரிக்கெட் சபை நடத்தாமல் எஸ்.ஈ.வி. நிறுவனத்திடம் ஏற்பாட்டுப் பொறுப்பை ஒப்படைத்ததால் இப்போட்டிகளில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0

  • jaliyuath Monday, 20 June 2011 07:03 PM

    நல்ல யோசனை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .