Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 17 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளான இன்றைய ஆட்டமுடிவின்போது இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், தரங்க பரணவிதான 48 ஓட்டங்களுடனும் லஹிரு திரிமான்னே 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தனது 100 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் குமார் சங்கக்கார இன்றைய ஆட்டமுடிவின்போது 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மஹேல ஜயவர்தன 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக அவுஸ்திரேலிய அணி இன்று பகல் தனது முதல் இன்னிங்ஸில் 316 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் நாளான நேற்று மாலை ஆட்டமுடிவின்போது அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இன்று பகல் அவ்வணி, 316 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மைக் ஹஸி 118 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரின் 15 ஆவது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பந்துவீச்சாளர்களில் சமிந்த எரங்க 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வெலகெதர 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago