2021 மே 10, திங்கட்கிழமை

லலித் மோடியின் மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

Super User   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீதான நிதிமுறைக்கேடு குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு இந்திய கிரிக்கெட் சபையின் தற்போதைய குழுவுக்குப் பதிலாக சுயாதீன விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என உத்தரவிடக் கோரி லலித் மோடி தாக்கல் செய்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

இந்திய கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்றுக் குழுவிலிருந்து மோடிக்குப் பின்னர் ஐ.பி.எல். தலைவராக பதவியேற்ற அமின் மற்றும் இந்திய கிரிக்கெட் சபையின் வடக்குப் பிராந்திய உப தலைவர் அருன் ஜேட்லி ஆகியோரை நீக்கவேண்டும் என மோடி கோரியிருந்தார்.

இந்த ஒழுக்காற்றுக் குழு பக்கச்சார்பானது எனக் கூறிய லலித் மோடி, அதற்கெதிராக தொடுத்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்திருந்தது. அதன்பின் அவர் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்.

நிதி முறைக்கேடு குற்றச்சாட்டுகளையடுத்து 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல்லிலிருந்து லலித் மோடியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நீக்கியமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X