Super User / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் மருத்துவப் பிரிவு விளையாட்டு வீரர்கள் பலருக்கு தடை செய்யப்பட்ட மருந்துகளை வழங்கியதாக புகார்கள் கிடைத்துள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைச்சு விசாரணை நடத்தும் எனவும் அவர் கூறினார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் கீதான்ஜன மெண்டிஸை பதவிநீக்கியுள்ளதோடு மருத்துவ நிபுணர்கள் குழுவை முற்றாக மாற்றியுள்ளதாகவும் அமைச்சர் அளுத்கமமே தெரிவித்தார்.
விளையாட்டு மருத்துவப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் அர்ஜுன டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பிரிவு தடைசெய்யப்பட்ட மருந்துகளை வழங்கியதாக விளையாட்டு வீரர்களிடமிருந்தும் சங்கங்களிடமிருந்து பல புகார்கள் கிடைத்தன என பிபிசியிடம் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.
' இந்த பிரிவில் எந்தவொரு விளையாட்டுத்துறை மருத்துவ நிபுணரும் இல்லை. இச்சூழ்நிலையில் குறிப்பாக அண்மைக்கால தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் சம்பவங்களின் பின்னணியில், நாடாளாவிய ரீதியில் போதை எதிர்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்குடன் இப்பிரிவை நாம் பலப்படுத்த வேண்டியுள்ளது என அவர் கூறினார்.
இவ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின்போது தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி குற்றச்சாட்டுக்குள்ளான இலங்கை அணி வீரர் உபுல் தரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் 3 மாத கால தடை விதிக்கப்பட்டது. குத்துச்சண்டை வீரர் மஞ்சு வன்னியாரச்சி, பளுதூக்குதல் வீரர் சிந்தன விதானகே மற்றும் சில றக்பி வீரர்களுக்கும் சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
33 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
33 minute ago
3 hours ago
4 hours ago