Super User / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
லண்டனில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற எம்.சி.சி. கொலின் கௌட்ரி 2011 சொற்பொழிவின்போது, கிரிக்கெட் நிர்வாகத்தில் இடம்பெறும் ஊழல்கள் குறித்து விமர்சித்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்காரவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
குமார் சங்கக்காரவின் மேற்படி உரை தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அமைச்சர் அளுத்கமகே உத்தரவிட்டிருந்தார்.
இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சங்கக்காரவிடம் அவுஸ்திரேலிய அணியுடனான சுற்றுப்போட்டி முடிந்த பின்னர் இதுதொடர்பாக பேசவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழுத் தலைவர் உபாலி தர்மதாஸ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், சங்கக்காரவிடம் இது தொடர்பாக விளக்கம் கோரப்படவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இப்போது பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவிடம் தெரிவித்துள்ளார்.
"அது ஒரு மிகச்சிறந்த சொற்பொழிவு என்பதில் சந்தேகமில்லை. அவரின் உரையின் கடைசி பகுதிதான் எமது கரிசனைக்குரியதாக இருந்தது. அதை அவர் இலங்கையில் கூறியிருக்க வேண்டும், இங்கிலாந்தில்அல்ல எனினும் அவரிடம் நாம் விளக்கம் கோரவில்லை. விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை" என அமைச்சர் அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
* சங்கக்காரவின் உரை குறித்து விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு
* கிரிக்கெட் அரசியல் அணிக்குள்ளும் பரவி பிளவை ஏற்படுத்தியது: சங்கக்க்கார
32 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
Zawmy Shifran Monday, 03 October 2011 08:19 PM
ஏன் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளிவந்து விடுமோ?
Reply : 0 0
KLM Monday, 03 October 2011 08:40 PM
அப்படி வாங்க வழிக்கு.
Reply : 0 0
zamroodh Monday, 03 October 2011 10:23 PM
சபாஷ் நன்பர்களே
Reply : 0 0
ram Tuesday, 04 October 2011 04:54 PM
சங்கக்கார ஈஸ் கிரேட் .....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025