Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 27 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேல்ஸ் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுநரும் முன்னாள் தலைவருமான கெரி ஸ்பீட் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
42 வயதான கெரி ஸ்பீட் செஷையர் நகரிலுள்ள அவரின் வீட்டில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.
இம்மரணம் தொடர்பாக சந்தேகம் எதுவுமில்லை எனவும் இது தற்கொலை எனக் கருதுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இவர் பிபிசி கால்பந்தாட்ட நிகழ்ச்சியொன்றிலும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. மனைவியையும் இரு பிள்ளைகளையும்விட்டு அவர் பிரிந்துள்ளார்.
1990 முதல் 2004 ஆம் ஆண்டுவரை வேல்ஸ் தேசிய அணிக்காக அவர் 85 போட்டிகளில் விளையாடி 7 கோல்களை அடித்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் லீட்ஸ் யுனைட்டெட் நியூகாசல் யுனைடெட், போல்டன் வாண்டரர் , எவர்ட்டன், ஷீபீல்ட் யுனைடெட் ஆகிய இங்கிலாந்து கால்பந்தாட்ட கழகங்களுக்காக மொத்தமாக 677 போட்டிகளில் 103 கோல்களை குவித்தார்.
காயங்கள், இடைநிறுத்தங்களால் அதிகம் பாதிக்கப்படாத அவர், அதிக எண்ணிக்கையான இங்கிலாந்து பிரிமியர் லீக் போட்டிகளில் (535) விளையாடிய வீரர் எனும் சாதனையையும் படைத்திருந்தார். பின்னர் இச்சாதனை டேவிட் ஜேம்ஸினால் முறியடிக்கப்பட்டது.
கெரி ஸ்பீட்டின் மரணம் குறித்து உலகெங்குமுள்ள கால்பந்தாட்டத்துறை அதிகாரிகளும் வீரர்களும் அதிர்ச்சியும் அனுதாபமும் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் இன்று நடைபெற்ற பல போட்டிகள் ஆரம்பமாகுவதற்குமுன் கெரி ஸ்பீட்டிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அஸ்டன் வில்லா கோல் காப்பாளர் ஷே கிவன் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.
25 minute ago
35 minute ago
43 minute ago
58 minute ago
neethan Monday, 28 November 2011 04:37 PM
மேற்கின் குடும்ப வாழ்கையில் ஏற்படும் விரிசல் கெரி ஸ்பீட்டினது தற்கொலைக்கு காரணமோ? எதுவாக இருந்தாலும் உதைபந்தாட்ட உலகு நல்லதொரு பயிற்சியாளரையும் வீரரையும் இழந்துவிட்டது.
Reply : 0 0
Kethis Monday, 28 November 2011 08:10 PM
இவ்வளவு வசதியான வாழ்க்கை, பணம், புகழ் எல்லாம் இருந்தும் இது ஏன்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
43 minute ago
58 minute ago