2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்

Super User   / 2011 நவம்பர் 28 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (இலங்கை கிரிக்கெட் சபை) நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு திகதி குறிப்பிடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, இத்தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளை நீதிபதிகள் என்.ஜி.அமரதுங்க, எஸ்.ஐ. இமாம், பிரியசாத் தீப் ஆகியோர் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

யுனைட்டெட் சதர்ன் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் எம்.எஸ்.அசோக மெண்டிஸ் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை கடந்த வருடம் ஒக்டோபர் 11 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை தொடர்ச்சியாக இடைக்கால நிர்வாகக் குழுக்கள் நிர்வகிப்பதற்கு இடமளிக்காமல் நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

கிரிக்கெட்டினதும் நாட்டினதும் நலன் கருதி 3 மாத காலத்திற்குள் இத்தேர்தலை நடத்துவது குறித்து ஆராயுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கடந்த மே 9 ஆம் திகதி உயர் நீதிமன்றம் ஆலோசனை கூறியிருந்தது.

இத்தேர்தலை ஜனவரி 3 ஆம் திகதி நடத்த தற்போது விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .