Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 29 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனம் நடத்திய மகளிர் கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இராணுவ கால்பந்தாட்டக் கழகம் சம்பியனாகியுள்ளது.
நேற்று திங்கட்கிழமை கொழும்பு சி.ஆர்.அன்ட் எவ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை விமானப்படைக் கழகத்துடன் மோதியது. இப்போட்டியின் இடைவேளையின்போது இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்றிருந்தன. நிர்ணயிக்கப்பட்ட ஆட்டநேரம் 1-1 விகிதத்தில் முடிவுற்றது.
அதன்பின் பெனால்டி உதைகள் வழங்கப்பட்ட போது இராணுவக் கழகம் 4-3 விகிதத்தில் வென்றது.
பொலிஸ், கடற்படை, கம்பஹா, குருநாகல் கால்பந்ந்தாட்டக் கழகங்களும் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றியிருந்தன.
இத்தொடரின் சிறந்த வீராங்கனையாக சி.எஸ். பிரான்சிஸும் (விமானப்படை) சிறந்த கோல் காப்பாளராக ஏ.எம்.ஏ.எஸ்.விஜேரட்னவும் (இராணுவம்) தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
57 minute ago