2021 ஜனவரி 20, புதன்கிழமை

இந்திய - பாகிஸ்தான் தொடருக்காக எதிர்பார்ப்பு: இம்ரான் கான்

A.P.Mathan   / 2012 நவம்பர் 08 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்காக எதிர்பார்ப்புடன் காணப்படுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், உலகில் தோன்றிய மிகச்சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

டிசெம்பர் மாத இறுதியில் இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி ஜனவரி மாதத் தொடக்கம் வரை 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளிலும், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபெறவுள்ளது.

அரசியல் ரீதியாக மாறான கருத்துக்களைக் கொண்டுள்ள இரு நாடுகளுக்குமிடையிலான கிரிக்கெட் போட்டிகள் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேம்படுத்த உதவும் எனத் தெரிவித்த அவர், எனினும் அரசியல்வாதிகளின் பிழையான கருத்துக்கள் உறவுகளை மோசமாக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இரு நாடுகளின் அரசியல்வாதிகள், அரசாங்கங்களுக்கிடையிலான உறவுகள் ஓரளவு நேர்முகத் தன்மையுடன் காணப்படும் போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுக்கான சிமெந்து போல் கிரிக்கெட் செயற்பட முடியும் எனவும், கிரிக்கெட் இரு நாடுகளையும் இணைப்பதற்கு உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.

தன்னுடைய காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான அமைதி நிலவிய காலத்திலும், இரு நாடுகளுக்குமிடையிலான போர் இடம்பெற்றுவந்த காலத்திலும் தான் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்றியதை அவர் நினைவுபடுத்தினார்.

கிரிக்கெட் போட்டிகளை ஆரோக்கியமான போட்டியெனத் தெரிவித்த அவர், கிரிக்கெட் போட்டிகள் இரு நாடுகளுக்குமிடையிலான மக்களை இணைக்கக்கூடியது எனவும், அதன் காரணமாக கிரிக்கெட் போட்டிகளுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .