2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்து திரும்பினார் கிரேம் ஸ்வான்

A.P.Mathan   / 2012 நவம்பர் 08 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் இங்கிலாந்திற்குத் திரும்பியுள்ளார். உடல் உபாதைக்குள்ளாகியுள்ள தனது குழந்தையைப் பார்ப்பதற்காகவே அவர் இங்கிலாந்திற்குத் திரும்பியுள்ளார்.

இன்றைய தினம் ஹரியானா அணிக்கெதிரான பயிற்சிப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவர் இங்கிலாந்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் முதலாவது பயிற்சிப் போட்டியில் பங்குபற்றியிருந்ததோடு, இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. இன்று ஆரம்பித்த மூன்றாவது போட்டியில் அவர் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர் இன்றைய போட்டியில் பங்குபற்ற முடியாதது போயுள்ளது.

இவ்விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை, இவ்விடயம் கிரேம் ஸ்வானின் தனிப்பட்ட விடயம் எனவும், அவரின் தனிப்பட்ட விடயத்தில் தலையீடுகள் காணப்படுவதை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மேலதிக கருத்துக்களை இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை வெளியிடாது எனத் தெரிவித்தார்.

தற்போது 12ஆம் இடத்தில் டெஸ்ட் பந்துவீச்சாளராகத் தரப்படுத்தப்பட்டுள்ள கிரேம் ஸ்வான், நீண்ட காலமாக உலகின் இரண்டாம் நிலைச் சுழற்பந்து வீச்சாளராகத் தரப்படுத்தப்பட்டிருந்ததோடு, உலகில் தற்போது காணப்படும் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

கிரேம் ஸ்வான் இங்கிலாந்திற்குத் திரும்பியுள்ள போதிலும் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்தியாவிற்குத் திரும்புவார் எனக் கருதப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .