2021 ஜனவரி 23, சனிக்கிழமை

காயமடைந்தார் திலகரட்ண டில்ஷான்

A.P.Mathan   / 2012 நவம்பர் 09 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீர்ர் திலகரட்ண டில்ஷான் முதுகு உபாதையைச் சந்தித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கெதிரான 4ஆவது, 5ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் திலகரட்ண டில்ஷான் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கு முன்னதாக பயிற்சிகளின் போது திலகரட்ண டில்ஷான் காயமடைந்ததாகவும், எனினும் வலி நிவாரணிகளின் உதவியோடு திலகரட்ண டில்ஷான் அப்போட்டியில் பங்குபற்றியதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே 4ஆவது, 5ஆவது போட்டிகளில் திலகரட்ண டில்ஷான் பங்குபற்றமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மூன்றாவது போட்டியில் இலங்கை அணி சார்பாக அதிரடியாக ஆடிய திலகரட்ண டில்ஷான் 95 பந்துகளில் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களைக் குவித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றிருந்தார்.

காயமடைந்துள்ள திலகரட்ண டில்ஷானுக்குப் பதிலாக அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் சாமர கப்புகெதர அணியில் இணைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .