2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

இறுதி நேர விக்கெட்டுக்கள் இங்கிலாந்திற்கு உதவி

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், ஹரியானா அணிக்குமிடையிலான பயிற்சிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்றாகும். நேற்றைய நாள் முடிவில் ஹரியானா அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

3 விக்கெட்டுக்களை இழந்து 408 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் நேற்றைய நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 521 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக கெவின் பீற்றர்சன் 110 ஓட்டங்களைப் பெற்று ஓய்வுபெற்றதோடு, அலஸ்ரெயர் குக் 97 ஓட்டங்களையும், நிக் கொம்ப்ரன் 74 ஓட்டங்களையும், சமித் பட்டேல் 67 ஓட்டங்களையும், இயன் பெல் 62 ஓட்டங்களையும், ஜொனதன் ட்ரொட் 46 ஓட்டங்களையும், மற் பிரயர் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹரியானா அணி சார்பாக அமித் மிர்ஷா, ஜெயந் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களையும், சச்சின் ரானா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் பதிலளித்தாடிய ஹரியானா அணி நேற்றைய நாள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவ்வணி, அதன் பின்னர் விக்கெட்டுக்களைத் தொடர்ச்சியான இழந்திருந்தது.

துடுப்பாட்டத்தில் ஹரியானா அணி சார்பாக ராகுல் ரேவான் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும், சனி சிங் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ரிம் பிரெஸ்னன் 2 விக்கெட்டுக்களையும், மொன்ரி பனசர், சமித் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

4 நாட்கள் கொண்ட போட்டியின் மூன்றாவது போட்டி இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .