2021 ஜனவரி 23, சனிக்கிழமை

எந்த விதமான ஆடுகளங்களிலும் பந்துவீசத் தயார்: சுனில் நரைன்

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

2 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக பங்களாதேஷிற்குச் சென்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், அங்கு வைத்துச் சிறப்பாகச் செயற்பட எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முதலாவது டெஸ்ட் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் பங்களாதேஷின் ஆடுகளங்கள் தொடர்பான கவலை கிடையாது எனவும், எந்தவிதமான ஆடுகளங்களிலும் பந்துவீசத் தயாராக இருப்பதாக மேற்கிந்தியத் தீவுகளின் மாயச் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் ஆடுகளங்கள் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்குச் சாதகத்தன்மையை வழங்குபவை என்ற போதிலும், மிர்புரிலுள்ள ஷேரே பங்களா மைதானம் கடந்த சில போட்டிகளாக வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகத்தன்மையை வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முதலாவது போட்டி இம்மைதானத்திலேயே இடம்பெறவுள்ள நிலையில் அதுகுறித்து சுனில் நரைன் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

தனக்கு விருப்பமான ஆடுகளமென்று ஒன்று கிடையாது எனத் தெரிவித்த அவர், தான் எங்கு பந்துவீச வேண்டும் என்பதைக் கணித்துப் பந்துவீசுவதே தனது கடமையெனவும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாகக் கடினமான உழைப்பதுவும், தனது பணியில் முழுமையான கவனத்துடன் காணப்படுவதையும் தான் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலக்கென்று எதையும் நிர்ணயித்திருக்கவில்லை எனத் தெரிவித்த சுனில் நரைன், தன்னால் இயன்ற அத்தனையையும் போட்டியின் போது வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .