2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

தென்னாபிரிக்க பந்துவீச்சே உலகில் சிறந்தது: அம்லா

A.P.Mathan   / 2012 நவம்பர் 15 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சே உலகில் சிறந்த வேகப்பந்து வீச்சு அணியாகக் காணப்படுவதாக தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி சிறப்பாகப் பந்துவீசியிருக்காத போதிலும், தமது அணியின் பந்துவீச்சுத் தொடர்பாக நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் 3 விக்கெட்டுக்களை இலகுவாகக் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி, அதன் பின்னர் எட் கொவான், மைக்கல் ஹசி ஆகிய வீரர்களைச் சதம் பெற அனுமதித்ததோடு அணித்தலைவர் மைக்கல் கிளார்க் 250 ஓட்டங்களைப் பெறவும் அனுமதித்திருந்தனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ஹசிம் அம்லா, அவுஸ்திரேலிய அணி சிறப்பான பந்துவீச்சு வரிசையைக் கொண்டுள்ளதாகவும், அத்தோடு சொந்த நாட்டின் விளையாடும் அனுகூலமும் அவர்களுக்குக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் உலகின் சில பந்துவீச்சு வரிசைகள் சிறப்பானவையாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஹசிம் அம்லா, தன்னுடைய கருத்துப்படி தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு வரிசையே உலகில் சிறந்ததாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

அத்தோடு அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளின் பந்துவீச்சு வரிசைகளும் மிகச்சிறப்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியடைந்து முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .