2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

உள்ளூர் அணியால் நீக்கப்பட்டார் உமர் அக்மல்

A.P.Mathan   / 2012 நவம்பர் 15 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்தான் அணியின் மத்தியவரிசைத் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் அவரது உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மோசமான ஃபோர்ம் காரணமாகவே அவர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் சுய் வடக்கு "பைப் லைன்ஸ்" நிறுவனத்தின் அணியிலிருந்தே உமர் அக்மல் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் முதற்தரப் போட்டித் தொடரொன்றிலிருந்தே உமர் அக்மல் நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் பிரதான வீரராகக் காணப்படும் உமர் அக்மல், பாகிஸ்தானின் டெஸ்ட் அணியில் இன்னமும் நிரந்தரமான இடத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையிலேயே அவர் உள்ளூர் அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் பசித் அலி, உமர் அக்மலின் மோசமான ஃபோர்ம் காரணமாகவே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு முதற்தரப் போட்டிகளில் எவ்வாறு விளையாடுவது என்பதை உமர் அக்மல் கற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த பயிற்றுவிப்பாளர், முதற்தரப் போட்டிகளில் விளையாட வேண்டுமானால் உமர் அக்மல் தனது துடுப்பாட்ட நுட்பங்களைச் சீர்செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்த உமர் அக்மல், இத்தொடரில் பங்குபற்றுவதற்கு ஆர்வமாகக் காணப்பட்டதாகவும், இந்நிலையில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .