2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

இந்தியா முழு ஆதிக்கம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 16 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முழுமையான ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்திய அணி பெற்றுக் கொண்ட 521 ஓட்டங்களுக்குப் பதிலளித்தாடி தனது முதலாவது இனிங்ஸில் ஆடி வரும் இங்கிலாந்து அணி இன்றைய நாள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறி வருகிறது. முதலாவது விக்கெட்டுக்கக 26 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும் அதன் பின்னர் விக்கெட்டுக்கள் விரைவாக இழக்கப்பட்டன.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக அலஸ்ரெயர் குக் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். மறுபுறத்தில் கெவின் பீற்றர்சன் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது காணப்படுகிறார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் 2 விக்கெட்டுக்களையும், பிரக்ஜான் ஓஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக 4 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றைய நாளை ஆரம்பித்த இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 521 ஓட்டங்களைப் பெற்று தனது இனிங்ஸை இடைநிறுத்தியது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக செற்றேஸ்வர் புஜாரா ஆட்டமிழக்காமல் 206 ஓட்டங்களையும், விரேந்தர் செவாக் 117 ஓட்டங்களையும், யுவ்ராஜ் சிங் 74 ஓட்டங்களையும், கௌதம் கம்பீர் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக கிரேம் ஸ்வான் 5 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் அன்டர்சன், சமித் பட்டேல், கெவின் பீற்றர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .