2021 ஜனவரி 23, சனிக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளின் முடிவுகள்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 18 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளின் நேற்றைய போட்டிகளில் ஆர்சனல், லிவர்பூல், மன்செஸ்டர் சிட்டி, ஸ்வன்சீ, கௌதம்டன், ரெடிங், வெஸ்ட் ப்ரோம்விச், நோர்விச் கழகங்கள் வெற்றிபெற்றுள்ளன.

ஆர்சனல் கழகத்திற்கும், ரொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் கழகத்திற்குமிடையிலான போட்டியில் ஆர்சனல் கழகம் 5 - 2 என்ற கணக்கில் இலகுவான வெற்றியைப் பெற்றது.

ரொட்டென்ஹம் கழகம் சார்பாக 10ஆவது நிமிடத்தில் கோலொன்று பெறப்பட்ட போதிலும், அந்த கோலைப்பெற்ற அடேபயோர் 18ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து ஆர்சனல் கழகம் 24ஆவது, 42ஆவது, 45ஆவது, 60ஆவது, 90ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்றது. ரொட்டென்ஹம் கழகம் 71ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றது.

லிவர்பூல் கழகத்திற்கும், விகான் அத்லட்டிக் கழகத்திற்குமிடையிலான போட்டியில் லிவர்பூல் கழகம் 3 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
லிவர்பூல் கழகம் சார்பாக 48ஆவது, 58ஆவது, 66ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டன.

மன்செஸ்டர் சிட்டி கழகத்திற்கும், அஸ்டன் வில்லா கழகத்திற்குமிடையிலான போட்டியில் மன்செஸ்டர் சிட்டி கழகம் 5 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
அக்கழகம் சார்பாக 43ஆவது, 54ஆவது, 65ஆவது, 67ஆவது, 74ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டன.

நியூகாசில் கழகத்திற்கும், ஸ்வன்சீ கழகத்திற்குமிடையிலான போட்டியில் ஸ்வன்சீ கழகம் 2 - 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. ஸ்வன்சீ கழகம் சார்பாக 58வது, 87ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டதுடன், நியூகாசில் அணி சார்பாக 90ஆவது நிமிடத்தில் கோலொன்று பெறப்பட்டது.

குயீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் அணிக்கும், சௌதம்டன் அணிக்குமிடையிலான போட்டியில் சௌதம்டன் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
சௌதம்டன் அணி சார்பாக 24ஆவது, 45ஆவது, 83ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டதுடன், குயீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் கழகத்தின் சார்பாக 69ஆவது நிமிடத்தில் கோலொன்று பெறப்பட்டது.

ரெடிங் கழகத்திற்கும், எவேர்ட்டன் கழகத்திற்குமிடையிலான போட்டியில் ரெடிங் கழகம் 2 - 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. ரெடிங் சார்பாக 51ஆவது, 78ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டதுடன், எவேர்ட்டன் சார்பாக 10ஆவது நிமிடத்தில் கோலொன்று பெறப்பட்டது.

வெஸ்ட் ப்ரோம்விச் கழகத்திற்கும், செல்ஷி கழகத்திற்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் வெஸ்ட் ப்ரோம்விச் கழகம் 2 - 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அக்கழகம் சார்பாக 10ஆவது, 51ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டதோடு, செல்ஷி சார்பாக 39ஆவது நிமிடத்தில் கோலொன்று பெறப்பட்டது.

நோர்விச் கழகத்திற்கும், மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்திற்குமிடையிலான போட்டியில் நோர்விச் கழகம் 1 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
நோர்விச் கழகம் சார்பாக 60ஆவது நிமிடத்தில் கோலொன்று பெறப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .