2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளின் ஒருநாள் அணி அறிவிப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 19 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது டெஸ்ற் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் இரண்டாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையிலேயே ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள அணியில், முதலாவது டெஸ்ற் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரசம்மி பேர்மாள், கெரன் பவல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதலாவது டெஸ்ற் போட்டியில் சுனில் நரைனை விட வீரசம்பி பேர்மாள் பலமடங்கு சிறப்பாகப் பந்துவீசியதுடன், கெரன் பவல் இரு இனிங்ஸ்களிலும் சதம் பெற்று ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார்.

அத்தோடு டெஸ்ற் தொடரில் உடற்தகுதிப் பிரச்சினைகளுக்காகச் சேர்க்கப்பட்டிருக்காத கேமர் ரோச் ஒருநாள் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ற் போட்டிகளுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட வீரர்களின் ஷிவ்நரின் சந்தர்போல், நர்சிங் டியோநரைன், ஃபிடல் எட்வேர்ட்ஸ், கேர்க் எட்வேர்ட்ஸ், அஸ்ஸட்

ஃபுடாடின், டினேஷ் ராம்டின் ஆகியோர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.
சகலதுறை வீரர் டுவைன் பிராவோ தனது உடற்தகுதியை நிரூபிக்காத நிலையில் அணியில் அவருக்கான இடம் கிடைத்திருக்கவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:


டெரன் சமி, கெரன் பொலார்ட், ரீனோ பெஸ்ட், டெரன் பிராவோ, கிறிஸ் கெயில், சுனில் நரைன், வீரசம்பி பேர்மாள், கெரன் பவல், ரவி ராம்போல், கேமர் ரோச், அன்ட்ரே ரசல், மார்லன் சாமுவேல்ஸ், லென்டில் சிமன்ஸ், டுவைன் ஸ்மித், டெவோன் தோமஸ்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .