2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

இந்தியத் தொடருக்காக எதிர்பார்ப்புகளுடன் உள்ளேன்: அஜ்மல்

A.P.Mathan   / 2012 நவம்பர் 20 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு இறுதியில் இந்தியாவில் இடம்பெற எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற மிகுந்த ஆவலுடன் உள்ளதாக பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் 3ஆம் இடத்திலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிப் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்திலும், டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் முதலிடத்திலும் காணப்படும் சயீட் அஜ்மல், இந்திய அணியைத் தான் எதிர்கொண்டது குறைவு என்பதால் இந்தியாவிற்கான தொடர் முக்கியமானது எனத் தெரிவித்தார்.

தான் சர்வதேசப் போட்டிகளில் தனது பிந்திய வயதிலேயே பங்குபற்ற ஆரம்பித்ததால் இந்திய அணிக்கெதிராக இதுவரை ஒரேயொரு போட்டியில் மாத்திரம் பங்குபற்றியுள்ளதாகத் தெரிவித்த அஜ்மல், அது இந்தியாவில் வைத்து 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

எனவே தற்போது இந்தியாவில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்ற மிகுந்த ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தியாவின் துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்தியாவில் வைத்துப் பந்துவீசுவது சவாலானதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி முதலில் 2 டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளிலும், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகள் டிசெம்பர் 25ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .