2021 ஜனவரி 23, சனிக்கிழமை

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவன் ஃபின் இல்லை

A.P.Mathan   / 2012 நவம்பர் 21 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டிக்கான அணியில் ஸ்டீவன் ஃபின் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட உடல் உபாதை காரணமாகவே அவர் பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி பங்குகொண்ட முதலாவது பயிற்சிப் போட்டியில் உபாதைக்குள்ளான ஸ்டீவன் ஃபின், அதன் பின்னர் தொடர்ச்சியாகக் குணமடைந்து வந்ததோடு இரண்டாவது போட்டியில் பங்குகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டி ஃபிளவர், தனது உடற்தகுதியை நிரூபிப்பதற்காக ஸ்டீவன் ஃபின் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு வந்ததாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது காலில் மீண்டும் உபாதையேற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே இரண்டாவது போட்டியில் அவர் பங்குகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவன் ஃபின்னுக்கு ஏற்பட்ட உபாதை தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அன்டி ஃபிளவர், அவருக்கான ஸ்கான் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்தார். ஸ்கான் பரிசோதனையின் பின்னர் இத்தொடரில் அவர் பங்குபெறுவது பற்றிய முடிவு எடுக்கப்படும் என அன்டி ஃபிளவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் மும்பையில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .