2025 ஜூலை 12, சனிக்கிழமை

செல்சியின் முகாமையாளர் பதவி நீக்கம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 21 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்சி கால்பந்தாட்டக் கழகத்தின் முகாமையாளராகப் பதவி வகித்து வந்த ரொபேர்ட்டோ டீ மாற்றயோ அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவ்வணியின் அண்மைக்கால பெறுபேறுகள் காரணமாகவே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள செல்சி கழகம், செல்சி அணியின் முகாமையாளர் ரொபேர்ட்டோ டீ மாற்றயோவிடமிருந்து செல்சி கழகம் இன்று காலையில் பிரிந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக அணியின் திறமை வெளிப்பாடுகளும், முடிவுகளும் சிறப்பாகக் காணப்பட்டிருக்காத நிலையில் மாற்றமொன்று தேவைப்பட்டதாக அணியின் உரிமையாளரும், நிர்வாகிகளும் உணர்ந்திருந்தனர் எனவும், கழகத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்ல முக்கியமான முடிவை எடுக்க வேண்டி அமைந்ததாகவும் செல்சி கழகம் தெரிவித்துள்ளது.

செல்சி கழகத்தின் முகாமையாளராகக் காணப்பட்ட அன்ட்ரே விலாஸ் போகஸ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் கடந்த மார்ச் மாதம் செல்சி அணியின் பயிற்றுவிப்பாளராகப் பதவியேற்ற ரொபேர்ட்டோ டீ மாற்றயோ, தனது குறுகிய பதவிக்காலத்தில் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக், இங்கிலாந்தின் எப்.ஏ கிண்ணம் ஆகியவற்றின் சம்பியன் பட்டங்களை வெற்றிகொள்ள உதவியிருந்தார்.

ஆனால் ரொபேர்ட்டோ டீ மாற்றயோவின் கீழ் செல்கீ அணி இறுதியாக ஜுவன்ரஸ் அணிக்கெதழரான 0-3 என்ற தோல்வியைப் பெற்றுக் கொண்டதோடு, அண்மைக்காலத்தில் வெற்றிகளைப் பெறத் தவறியதன் காரணமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .