2021 மே 15, சனிக்கிழமை

இங்கிலாந்தின் ஸ்ருவேர்ட் ப்ரோடிற்கு உபாதை

Kogilavani   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணியின் உப தலைவரும், டுவென்டி டுவென்டி அணியின் தலைவருமான ஸ்ருவேர்ட் ப்ரோட் உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ருவேர்ட் ப்ரோடின் குதிக்காலிலேயே உபாதை ஏற்பட்டுள்ளது.

இவருக்கு ஏற்கனவே காணப்பட்ட இவ் உபாதை, இங்கிலாந்து அணியின் இந்தியச் சுற்றுலாவின் முதற்போட்டிக்கு முன்னதாக ஏற்பட்டிருந்த போதிலும் இறுதிநேரத்தில் அது குணமடைந்து அப்போட்டியில் அவர் பங்குபற்றியிருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது அவருக்கு மீண்டும் உபாதை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து சார்பாக முதலிரண்டு போட்டிகளிலும் பங்குபற்றிய ஸ்ருவேர்ட் ப்ரோட், மூன்றாவது போட்டியில் நீக்கப்பட்டதோடு, அவருக்குப் பதிலாக ஸ்டீவன் ஃபின் பங்குபற்றியிருந்தார்.

நாளை ஆரம்பமாகவுள்ள நான்காவது டெஸ்ற் போட்டியிலும் ஸ்ருவேர்ட் ப்ரோட் பங்குபெற மாட்டார் என்பது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

டெஸ்ற் போட்டிகளில் அவர் பங்குபற்ற மாட்டார் என்ற போதிலும், இந்திய அணிக்கெதிராக இடம்பெறவுள்ள டுவென்டி டுவென்டி போட்டிகளில் அவர் தலைவராகச் செயற்படவிருந்தார் என்பதோடு, சிரேஷ்ட வீரர்களான கிரேம் ஸ்வான், கெவின் பீற்றர்சன் ஆகியோருக்கும் ஓய்வு வழங்கப்பட்டிருந்த நிலையில் அணியின் முக்கிய வீரராகவும் காணப்பட்டிருந்தார்.

தற்போதைய நிலையில் அவருக்கு ஸ்கான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் இந்திய அணிக்கெதிராக இடம்பெறவுள்ள டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றுவது சந்தேகத்திற்குரியது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .