2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

நியூசிலாந்தைத் தோற்கடித்தது தென்னாபிரிக்கா

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான முதலாவது டுவென்டி டுவென்டி போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றிபெற்றுள்ளது. மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்களால் இப்போட்டியில் வெற்றிபெற்றிருந்தது.

டேர்பனில் இடம்பெற்ற இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 86 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்த நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்களை இழந்து 36 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பாக கொலின் முன்ரோ 18 பந்துகளில் 23 ஓட்டங்களையும், டக் பிரேஸ்வேல் 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும், ஜிம்மி நீஷம் 7 பந்துகளில் 10 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எந்த வீரரும் இரட்டைப்படை ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக ரோறி கிளெய்ன்வெல்ட்ற் ரோறி கிளெய்ன்வெல்ட்ற் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ரொபின் பீற்றர்சன் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், டேல் ஸ்ரெய்ன் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், கிறிஸ் மொரிஸ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

87 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டை முதலாவது ஓவரில் ஓட்டமெதனையும் பெறாமலேயே இழந்த தென்னாபிரிக்க அணி, அதன் பின்னர் சிறப்பாக ஆடியது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக அணித்தலைவர் பஃப் டு பிளெஸிஸ் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும், குயின்டன் டீ கொக் 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும், ஹென்றி டேவிட்ஸ் 13 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக மிற்சல் மக்லநகன், ரொனி ஹீரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக தென்னாபிரிக்க அணியின் ரோறி கிளெய்ன்வெல்ட்ற் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .