Freelancer / 2026 மே 21 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் வர்த்தகர்களுக்குக் கடந்த காலத்தில் இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிரான விசாரணைகளின் போது எந்தவொரு அதிகாரிக்கும் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்றும், தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தத்தமது எல்லைகளுக்குள் நின்று தமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளைச் சரியாக நிறைவேற்றும் எனத் தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இதன்போது தற்போதைய சட்டக் கட்டமைப்பு போதுமானதாக இல்லையெனில், புதிய சட்டங்களை இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசாங்கம், மத ஸ்தாபனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அர்ப்பணிப்புடனும், தளராத முயற்சியுடனும், தொடர்ச்சியான அவதானத்துடனும் செயற்படுவதன் மூலம் இந்த ஆபத்தைத் தோற்கடிக்க முடியும் என்றும், அதற்காக அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற, போதைப்பொருள் பேரழிவுக்கு எதிரான “முழு நாடுமே ஒன்றாக” மட்டக்களப்பு மாவட்ட விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 6 மாத காலத்திற்குள் போதைப்பொருளுக்கு எதிரான சோதனைகள் மற்றும் கைதுகளில் விசேட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வழங்கிய தனித்துவமான பங்களிப்பையும் ஜனாதிபதி இதன்போது பாராட்டினார். (a)

7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago