2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இந்திய, இங்கிலாந்து இரண்டாவது போட்டி இன்று

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டுவென்டி டுவென்டி தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

மும்பையில் இடம்பெறவுள்ள இப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் இந்திய அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில் இத்தொடரை இந்திய அணி தோற்பதற்கு வாய்ப்பில்லை என்பதோடு, இத்தொடரைச் சமப்படுத்த இங்கிலாந்து விரும்பினால் இன்றைய போட்டியை வென்று கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

அனுபவமற்ற, இளைய அணியான இங்கிலாந்து அணி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டிருந்த போதிலும் யுவ்ராஜ் சிங்கின் பந்துவீச்சில் தடுமாறி தனது பாதையை இழந்திருந்தது.

ஆகவே இன்றைய தினம் சிறப்பான பெறுபேறொன்றை வெளிப்படுத்த விரும்பும்.

இந்திய அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்ட போதிலும், இன்னும் முன்னேறிய பெறுபேறொன்றை வெளிப்படுத்த விரும்பும்.
எதிர்பார்க்கப்படும் அணிகள்:

இந்தியா: கௌதம் கம்பீர், அஜின்கியா ரஹானே, விராத் கோலி, ரோகித் சர்மா, யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, மகேந்திரசிங் டோணி, ரவிச்சந்திரன் அஷ்வின், பியூஸ் சாவ்லா, அஷோன் டின்டா, புவனேஷ்வர் குமார்

இங்கிலாந்து:
அலெக்ஸ் ஹேல்ஸ், மைக்கல் லம்ப், லூக் ரைட், ஒய்ன் மோர்கன், ஜோஸ் பட்லர், சமித் பட்டேல், ரிம் பிரெஸ்னன், ஜேம்ஸ் ட்ரெட்வெல், டனி பிறிஸ்க்ஸ், ஸ்ருவேர்ட் மீக்கர், ஜேம்ஸ் ஹரிஸ்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .