2021 ஜனவரி 20, புதன்கிழமை

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சச்சின் ஓய்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 23 ஆண்டுகளாக இந்திய அணியில் நீடித்து வரும் டெண்டுல்கரின் அண்மைய ஆட்டங்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது. இதனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற குரலும் வலுத்தது.

இந்நிலையில், இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான அணித் தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கும் டெண்டுல்கர், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்திருக்கிறது. இதுவரை மொத்தம் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 18, 426 ரன்களைக் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் உலக அளவில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற பெருமை சச்சினுக்கு உண்டு.

இது குறித்து சச்சின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

'நான் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். கிரிக்கெட் உலகக் கோப்பை வெல்லும் அணியில் இருக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

2015ஆம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பையை வெல்ல விரைவில் அதற்குத் தேவையான நடிவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இத்தனை ஆண்டுகளாக என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றிக்கடன்பட்டவனாக உள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

சச்சின் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1989ஆம் ஆண்டு முதன்முதலாக சர்வதசே ஒரு நாள் போட்டியில் விளையாடத் துவங்கினார். தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் சச்சின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
(தட்ஸ் தமிழ்)

  Comments - 0

  • nazeer Sunday, 23 December 2012 07:48 AM

    நல்ல முடிவு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .