2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

தோல்விகளுக்குத் துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும்: சுனில் கவாஸ்கர்

A.P.Mathan   / 2013 ஜனவரி 04 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் அண்மைக்கால தோல்விகளுக்கு இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பேற்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் தலைவரும், நேர்முக வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அண்மைக்காலத்தில் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வருவதோடு, உள்ளூரில் இடம்பெற்ற போட்டிகளில் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததோடு, டுவென்டி டுவென்டி தொடரைச் சமப்படுத்தியிருந்தது. அதன் பின்னர் பாகிஸ்தானுடனான டுவென்டி டுவென்டி தொடரைச் சமப்படுத்திய போதிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 2 போட்டிகளின் முடிவிலேயே தோற்றுள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த சுனில் கவாஸ்கர், இந்தியாவில் துடுப்பாட்ட வீரர்களே அதிக பிரபலமாகக் காணப்படுகிறார்கள் எனவும், அவர்களே கடந்த காலங்களில் அதிகளவில் பிரகாசித்து சிறந்த பெயரைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர் எனவும், எனவே துடுப்பாட்ட வீரர்களே சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

துடுப்பாட்ட வீரர்கள் நீண்டகாலமாக ஃபோர்மில் இல்லாது காணப்படுகின்றனர் எனத் தெரிவித்த சுனில் கவாஸ்கர், இந்நிலை உலகக்கிண்ணத்தின் பின்னர் தொடர்ந்து காணப்படுவதாகத் தெரிவித்தார்.

உலகக்கிண்ணத்தின் பின்னர் துடுப்பாட்ட வீரர்கள் சர்வதேசப் போட்டிகள் குறித்து போதியளவு கவனஞ் செலுத்தியிருக்கவில்லை எனத் தெரிவித்த அவர், சில வீரர்கள் தங்களது சத்திரசிகிச்சைகளை ஐ.பி.எல் போட்டிகளுக்காகப் பிற்போட்டுவிட்டு, ஐ.பி.எல். முடிவடைந்ததும் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாகவும், இதன் மூலம் சர்வதேசப் போட்டிகளை அவர்கள் தவறவிட்டிருந்தனர் எனவும் குற்றஞ்சாட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .