2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 20 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை  (21) நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

அதேநேரம், மின்சார சபையை மறுசீரமைக்கும் மசோதாவை எதிர்த்து மின்சார தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார சபை ஊழியர்கள் குழுக்களாக இணைந்து மின்சார சபை தலைமையகத்தின் முன் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

புதிய மின்சார சபைச் சட்டத்தின் பாதகமான விளைவுகளை எதிர்த்து தொடர்ந்தும் போராடுவோம் என மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X