2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

நாளைய போட்டியில் டோணி சந்தேகம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 05 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நாளைய போட்டியில் இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் டோணி பங்குகொள்வது குறித்துச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் பங்குபற்றிய டோணி, சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையிலேயே அவர் மூன்றாவது போட்டியில் பங்குபெறுவது தொடர்பான சந்தேகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

டோணிக்கு முதுகு உபாதை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக நாளைய போட்டியில் பங்குபற்றுவது சம்பந்தமாக சந்தேகம் காணப்படுவதாகவும் டோணி இன்று தெரிவித்தார். நாளைய போட்டியில் பங்குபற்ற முடியாது போனால், இந்திய அணியின் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்துத் தனக்குத் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மகேந்திரசிங் டோணியின் உபாதையையடுத்து இந்திய அணிக்கு டினேஷ் கார்த்திக் மேலதிக வீரராக அழைக்கப்பட்டுள்ளார். நாளைய போட்டியில் டோணி பங்குபற்றாதுவிடின் டினேஷ் கார்த்திக் விக்கெட் காப்பாளராகச் செயற்படுவார் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரினைத் தோற்றுள்ள போதிலும், நாளைய போட்டியில் இந்திய அணி போராட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .