2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

ஷேன் வொற்சனின் இடம் உறுதியில்லை: மைக்கல் கிளார்க்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 05 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலிய அணியில் அவ்வணியின் வீரர் ஷேன் வொற்சனின் இடம் உறுதியானதாக இல்லை என அவ்வணியின் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஷேன் வொற்சன் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் அணியில் இடம்பெற முடிவு செய்துள்ளதையடுத்தே மைக்கல் கிளார்க் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய அணியின் உப தலைவராக ஷேன் வொற்சன் அண்மைக்காலமாக உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார்.

இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசுவதிலிருந்து விலகி, தனியே துடுப்பாட்ட வீரராக மாத்திரம் செயற்பட ஷேன் வொற்சன் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மைக்கல் கிளார்க், சகலதுறை வீரராக இருந்த போது ஷேன் வொற்சனின் இடம் அணியில் அதிக தேவைக்குரியதாகக் காணப்பட்டதாகவும், தற்போது அவர் தனித்த துடுப்பாட்ட வீரராக மாறியுள்ள நிலையில் பெரியளவு வட்டத்திலிருந்து ஒருவராக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவுஸ்ரேலிய அணியில் எவரும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது எனத் தெரிவித்த மைக்கல் கிளார்க், திறமைகளின் அடிப்படையிலேயே அணித்தெரிவு இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய அணியின் உப தலைவராக ஷேன் வொற்சன் காணப்படுகிறார் எனத் தெரிவித்த மைக்கல் கிளார்க், அவரை அணியில் கொண்டிருக்க முடியுமாயின் சிறப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு அவரது சிறந்த ஃபோர்மில் அவர் உலகில் மிகச்சிறந்த ஒருவராகக் காணப்படுவார் எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--