2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வீரர்களைச் சந்திக்கிறார் பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களை இலங்கை அணியின் புதிய பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய இன்று சந்திக்கவுள்ளார்.

வீரர்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே அவர் இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

புதிய தேர்வாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஏனைய தேர்வாளர்களுடன் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்கள், போட்டி மத்தியஸ்தர்கள் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் சனத் ஜெயசூரிய, இந்தச் சந்திப்புக்களின் ஒரு கட்டமாகவே வீரர்களைச் சந்திக்கவுள்ளார்.

வீரர்களைச் சந்திப்பது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சனத் ஜெயசூரிய, இலங்கை கிரிக்கெட் சபையால் ஒப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள 60 வீரர்களையும் சந்திக்கவுள்ளதாகவும் அவர்களோடு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் வீரர்களது ஒழுக்கம் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த சனத் ஜெயசூரிய, வீரர்களைத் தங்களது பணியில் கவனம் செலுத்துமாறும் நிர்வாக விடயங்களில் தலையிடுவதைத் தவிர்க்குமாறும் கோரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் எதிர்காலம் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல்களில் பங்குபற்ற எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த சனத் ஜெயசூரிய, முக்கியமாக சிரேஷ்ட வீரர்களுடன் சிறந்த கலந்துரையாடலை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--