2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பதவி நீக்கம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்க அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக் கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு இதற்கான முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கைக் கிரிக்கெட் சபையின் தலைவர் உபாலி தர்மதாச, இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்க அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டமையை உறுதிசெய்தார். ஆனால் அவரது பதவி நீக்கம் குறித்த மேலதிக தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

சரித் சேனநாயக்கவின் இடத்திற்கு இலங்கையின் மற்றொரு முன்னாள் வீரரான மைக்கல் டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த உபாலி தர்மதாச, எனினும் அந்தப் பதவியை ஏற்பது குறித்து அவர் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக் கிரிக்கெட் சபைக்கெதிராக மஹேல ஜெயவர்தன ஊடகமொன்றிற்குப் பகிரங்கமாக எழுதிய கடிதத்தை வெளியிட மஹேலவிற்கு உதவிய காரணத்திற்காக மஹேலவோடு சேர்த்து விளக்கம் கோரப்பட்ட சரித் சேனநாயக்க, அந்தக் காரணத்திற்காகவும், சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தான் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் சபை அதிகாரியொருவர், சரித் சேனநாயக்க மீது குற்றச்சாட்டுக்கள் பலவும் காணப்படுவதாகவும், அவர் தனது பதவியை ஒழுங்காகச் செய்திருக்கவில்லை எனவும், வீரர்கள் அவர் குறித்து முறையிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .