2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

டுவென்டி டுவென்டி தலைமைக்கு சந்திமாலே பொருத்தமான​வர்: ஜெயசூரிய

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 15 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் டுவென்டி டுவென்டி அணியின் தலைமைத்துவத்திற்கு டினேஷ் சந்திமாலே பொருத்தமானவர் என இலங்கை அணியின் புதிய பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்தோடு அஞ்சலோ மத்தியூஸிற்கு அதிக பணிச்சுமையை வழங்காது விடவே சந்திமாலுக்கு அணித்தலைமை வழங்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இலங்கை அணியின் டுவென்டி டுவென்டி தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் இதுவரை பதவி வகித்து வந்த போதிலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் அணித்தலைமை நேற்று வழங்கப்பட்டபோது, டுவென்டி டுவென்டி அணித்தலைமை டினேஷ் சந்திமாலுக்கு வழங்கப்பட்டிருந்தது.

டுவென்டி டுவென்டி அணித்தலைமையையும் அஞ்சலோ மத்தியூஸிற்கு வழங்கினால் அவருக்கு அது அதிக சுமையாக எனக் கருதியதாகத் தெரிவித்த சனத் ஜெயசூரிய, அஞ்சலோ மத்தியூஸ் டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது கவனத்தைச் செலுத்த வேண்டுமெனத் தாங்கள் விரும்பியிருந்ததாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் டுவென்டி டுவென்டி அணித்தலைமைக்குப் பொருத்தமானவராக டினேஷ் சந்திமாலையே தாங்கள் கருதியதாகத் தெரிவித்த சனத் ஜெயசூரிய, அவருக்கு நீண்ட எதிர்காலம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அஞ்சலோ மத்தியூஸ் காயமடையும் சந்தர்ப்பங்களில் டினேஷ் சந்திமாலே இலங்கையின் தலைவராகச் செயற்படுவார் என்ற அடிப்படையில் அவருக்கு மேலதிக தலைமைத்துவ அனுபவங்கள் கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் சிரேஷ்ட வீரர்களான திலான் சமரவீர, பிரசன்ன ஜெயவர்தன ஆகியோர் நீக்கப்பட்டமை தொடர்பாக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்காத போதிலும், பங்களாதேஷிற்கெதிரான தொடரில் இளைய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்பியதாக சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • riyas Saturday, 16 February 2013 01:32 PM

    யார் சொன்னது சந்திமால் சரியானவர் என்று?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--