2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சங்கக்கார மூன்றாவது இடத்தில்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். தென்னாபிரிக்காவிற்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்தே குமார் சங்கக்கார மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
 
தென்னாபிரிக்காவிற்கெதிரான 5 போட்டிகளில் துடுப்பெடுத்தாடிய குமார் சங்கக்கார 93 என்ற சராசரியில், 107.51 என்ற அடித்தாடும் வேகத்தில் 372 ஓட்டங்களைக் குவித்து, அத்தொடரில் நாயகனாகத் தெரிவாகியிருந்தார்.
 
இத்தொடர் ஆரம்பிக்கும் போது 776 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் காணப்பட்ட குமார் சங்கக்கார, தனது கிரிக்கெட் வாழ்வில் பெற்ற அதிக புள்ளிகளான 829 புள்ளிகளைப் பெற்று 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 
பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தில் காணப்பட்ட சுனில் நரைனோடு இணைந்து ரவீந்திர ஜடேஜாவும் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இலங்கையின் ரங்கன ஹேரத் 11ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
 
சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கையின் திலகரட்ண டில்ஷான் 4ஆவது இடத்திலும், அஞ்சலோ மத்தியூஸ் 6ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர். முதலிடத்தில் ஷகிப் அல் ஹசன் காணப்படுகிறார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .