2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

டோணியின் வீட்டின் மீது கல் வீச்சு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணியின் வீட்டின் மீது கல் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியின் போதே இந்தக் கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.
 
றாஞ்சியில் அமைந்துள்ள டோணியின் வீட்டின் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதோடு, இந்தக் கல் வீச்சினால் அவரது வீட்டின் பின்பகுதியின் ஜன்னல் ஒன்று சேதமடைந்துள்ளது.
 
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டி நேற்றைய தினம் றாஞ்சியில் இடம்பெற்ற போது, டோணியின் குடும்பத்தினர் போட்டியைப் பார்வையிடுவதற்காக மைதானத்திற்குச் சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்ட மகேந்திரசிங் டோணியின் குடும்பத்தினர், எனினும் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்காக கண்காணிப்பு கமெராக்களின் உதவியை நாடியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
 
மகேந்திரசிங் டோணியின் வீடு தாக்கப்படும் 5ஆவது தடவை இதுவெனக் குறிப்பிட்ட டோணியின் மைத்துனர் கௌதம் குப்தா, கண்காணிப்புக் கமெராக்களின் வீடியோவைப் பார்வையிட்ட பின்பே இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க விரும்புவதாகவும், யாரையும் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .