2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டி முடிவுகள்

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டிகளில் ஆர்சனல், லிவர்பூல், எவேர்ட்டன், அஸ்ரன் வில்லாஇ செல்சீ, ஸ்வன்சீ, ரொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ், மன்செஸ்ரர் சிற்றி ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஆர்சனல் அணிக்கும் ஹள் சிற்றி அணிக்கும் இடையிலான போட்டியில் ஆர்சனல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 2ஆவது நிமிடத்தில் நிக்கலஸ் பென்ட்ற்னெர், 47ஆவது நிமிடத்தில் மெசுத் ஒசில் ஆகியோர் கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

லிவர்பூல் அணிக்கும் நோர்விச் சிற்றி அணிக்கும் இடையிலான போட்டியில் லிவர்பூல் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வணி சார்பாக லூயிஸ் சுவரேஸ் 15ஆவது, 29ஆவது, 35ஆவது, 74ஆவது நிமிடங்களிலும் றஹீம் ஸ்ரேர்லிங் 88ஆவது நிமிடத்திலும் கோல்களை பெற்றனர். நோர்விச் அணி சார்பாக பிரட்லி ஜோன்சன் 83வது நிமிடத்தில் கோலினைப் பெற்றுக்கொடுத்தார்.

எவேர்ட்டன் அணிக்கும் மன்செஸ்ரர் யுனைட்டட் அணிக்கும் இடையிலான போட்டியில் எவேர்ட்டன் அணி 1-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது. அவ்வணி சார்பாக 86ஆவது நிமிடத்தில் பிரையன் ஒவியேடோ கோலினைப் பெற்றுக்கொடுத்தார்.

அஸ்ரன் வில்லா அணிக்கும் சௌதம்டன் அணிக்கும் இடையிலான போட்டியில் அஸ்ரன் வில்லா அணி 3-2 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது. அஸ்ரன் வில்லா சார்பாக 15ஆவது நிமிடத்தில் கப்றியல் அக்பொன்லாஹொர், 64ஆவது நிமிடத்தில் லிபர் கொஸக், 80ஆவது நிமிடத்தில் ஃபபியோன் டெல்ப் ஆகியோர் கோல்களைப் பெற்றதோடு சௌதம்டன் சார்பாக 48ஆவது நிமிடத்தில் ஜே றொட்றிகஸ், 69ஆவது நிமடத்தில் பப்போ ஒஸ்வல்டோ ஆகியோர் கோல்களைப் பெற்றனர்.

ஸ்ரோக் சிற்றி அணிக்கும் கார்டிஃப் சிற்றி அணிக்கும் இடையிலான போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. செல்சீ அணிக்கும் சண்டர்லான்ட் அணிக்கும் இடையிலான போட்டியில் செல்சீ அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

அவ்வணி சார்பாக 17ஆவது நிமிடத்தில் பிராங்க் லம்பார்ட், 36வது, 52ஆவது நிமிடங்களில் எடன் ஹஸார்ட், 62ஆவது நிமிடத்தில் பிலிப் பார்ட்ஸ்லீ ஆகியோரும் சண்டர்லான்ட் சார்பாக 14ஆவது நிமிடத்தில் ஜோஸி அல்டிற்றோர், 48ஆவது நிமிடத்தில் ஜோன் ஓ ஷீ, 84ஆவது நிமிடத்தில் பிலிப் பார்ட்ஸ்லீ ஆகியோர் கோல்களைப் பெற்றனர்.

ஸ்வன்சீ சிற்றி அணிக்கும், நியூகாசில் யுனைட்டட் அணிக்கும் இடையிலான போட்டியில் ஸ்வன்சீ அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வணி சார்பாக நேதன் டயர் 45வது நிமிடத்திலும்  66ஆவது நிமிடத்தில் மத்தியூ டெபக்கி, 81ஆவது நிமிடத்தில் ஜொன்ஜோ ஷெல்வே ஆகியோரும் கோல்களைப் பெற்றனர்.

ரொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணிக்கும் ஃபுல்ஹாம் அணிக்கும் இடையிலான போட்டியில் ரொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வணி சார்பாக 73ஆவது நிமிடத்தில் கிறிச்செஸ், 82ஆவது நிமிடத்தில் லூயிஸ் ஹோல்ட்பி ஆகியோரும் ஃபுல்ஹாம் சார்பாக 57ஆவது நிமிடத்தில் அஷ்கன் தேஜகாவும் கோல்களைப் பெற்றனர்.

மன்செஸ்ரர் சிற்றி அணிக்கும்இ வெஸ்ற் ப்ரோம்விச் அல்பியன் அணிக்குமிடையிலான போட்டியில் மன்செஸ்ரர் சிற்றி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.அவ்வணி சார்பாக 9ஆவது நிமிடத்தில் சேர்ஜியோ அகுவேரோ, 24வது,  74ஆவது நிமிடங்களில் யாயா ருவரே ஆகியோரும் வெஸ்ற் ப்ரோம்விச் அணி சார்பாக 85வது நிமிடத்தில் கொஸ்ரல் பந்திலிமொன், 90வது நிமிடத்தில் விக்ரர் அனிச்செபேயும் கோல்களைப் பெற்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--