2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவரை பதவி விலக கோரிக்கை

A.P.Mathan   / 2014 மார்ச் 25 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் ஸ்ரீனிவாசனை அவரின் பதவியில் இருந்து விலகுமாறு நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.பி.எல் சூதாட்ட வழக்கை சமநிலையாக விசாரிக்க வேண்டுமானால் ஸ்ரீனிவாசன் பதவி விலக வேண்டும் என நீதிபதி A.P பட்னைக் கூறியுள்ளார்.

27ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டளையாக நீதிமன்றம் அறிவிக்காமல் ஒரு அறிவுறுத்தலாகவே நீதிபதி இதை தெரிவுத்துள்ளதோடு, ஊழல் குற்றச் சாட்டு மற்றும் சர்ச்சைகள் உள்ளபோது ஏன் இன்னும் அவர் பதவி விலகாமல் இருக்கின்றார் எனவும் நீதிபதி பட்னைக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவிக்க மறுத்த போதும், உப தலைவர்கள், ஸ்ரீனிவாசன் பதவியை ராஜினாமா செய்வதை விட வேறு வழியில்லை என தெரிவித்துள்ளனர். பதவி விலகாவிட்டால் நீதிமன்றம் அதற்க்கான உத்தரவை அறிவிக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன.

வழக்கு விசாரணையின் போது முன்னாள் நீதிபதி முட்களினால் வழங்கப்பட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணை இடம்பெற்றாலும் அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதாக நம்பபப்படுகின்றது. இந்த பிரச்சினை பெரிய பிரச்சினை எனவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அல்லது அதன் முகவர்களினால் விசாரிக்கப்பட்டு தீர்வு காண முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே விசாரணைகள் பெரியளவில் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் வெளிவராத பல விடயங்கள் வெளிவர வாய்ப்புகளும் உள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .