2021 மார்ச் 01, திங்கட்கிழமை

உலகில் கூடுதல் சம்பளம் பெறும் வீரராக மெஸ்ஸி விரைவில்

A.P.Mathan   / 2014 மார்ச் 26 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் கூடுதல் சம்பளம் பெறும் வீரராக ஆர்ஜன்டினாவின் வீரரும், பார்சிலோன கழக வீரருமான லியனல் மெஸ்ஸி சாதனை படைக்கவுள்ளார். இவரின் வார சம்பளமாக 330,000 ஸ்டேர்லிங் பவுண்டுகளை அவரின் கழகமான பார்சிலோன கழகம் வழங்க முடிவு செய்துள்ளது.

இவரின் ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு வரை 6 மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யபட்டுள்ள போதும் அண்மையில் ரியல் மாட்ரிட் கழகம், கிறிஸ்டியானோ ரோனல்டோவிற்கு ஊதிய உயர்வு வழங்கி கூடுதல் சம்பளம் பெறுபவர் என்ற நிலைக்கு உயர்த்தியது. அதேபோல இங்கிலாந்து வீரர் வெய்ன் ரூனிக்கு வாரத்துக்கு 300,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் சம்பளம் வழங்கபட்டது. இந்த நிலையில் “உலகின் பணக்கார கழகமான பார்சிலோன கழகம் தனது முன்னணி வீரருக்கு உலகின் கூடுதலான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதுடன் அவரின் மரியாதையும் காப்பாற்ற முடியும். அத்துடன் அவரை எம்முடன் வைத்திருக்க முடியும்” எனவும் பார்சிலோனா கழகத்தின் புதிய தலைவர் ஜோசெப் மரியா பர்டோமே தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் இந்த அறிவித்தல் விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .