2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

ஹேல்ஸ் சதம்; இலங்கை அணி இங்கிலாந்திடம் தோல்வி

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , மு.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணி இங்கிலாந்து அணியிடம் உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்றில் 6 விக்கெட்களினால் தோல்வியை சந்தித்து. இலங்கை அணி 160 ஓட்டங்களுக்கு மேல் பெற்று தோல்வியடைந்தது இதுவே முதற் தடவை ஆகும். அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இங்கிலாந்து அணி சார்பாக சர்வதேச 20-20 போட்டியில் பெறப்பட்ட முதல் சதம் இது. இதேவேளை இலங்கை அணிக்கு எதிராக பெறப்பட்ட முதல் சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் மஹேல ஜெயவர்த்தன 89(51 பந்துகள்) ஓட்டங்களையும், திலகரட்ன டில்ஷான் 55(47 பந்துகள்) ஓட்டங்களையும், திசர பெரேரா 23(12 பந்துகள்)ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜேட் டேன்பக், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுபாடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்காமல் 116(64 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றார். ஒய்ன் மோர்கன் 57(51 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக நுவான் குலசேகர 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். 

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2 புள்ளிகளைப் பெற்று குழு 1 இல் நான்காமிடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை அணி 4 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது.

  Comments - 0

  • saman Friday, 28 March 2014 03:17 PM

    ஸ்ரீலங்கா தோற்கும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .