2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

சம்பியன் லீக் தொடரின் அரை இறுதியில் செல்ஸி, ரியல்மாட்ரிட்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன் லீக் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிப் போட்டிகளில் செல்ஸி, ரியல்மாட்ரிட் அணிகள் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.

செல்ஸி அணி தங்கள் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை 2-0 என வெற்றி பெற்றது. பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் செல்சி அணி 2-1 என தோல்வியடைந்தது. இரு அணிகளினதும் மொத்த  கோல்கள் 3-3 என அமைந்த போதும் வெளி மைதானத்தில் செல்ஸி  கூடுதலான கோல்களை பெற்றமையினால் அரை இறுதிப்  போட்டிக்குத் தெரிவாகியது.

பொரிசியா டோர்ட்மன்ட் அணி,  ரியல்மாட்ரிட் அணியை தங்கள் மைதானத்தில் வைத்து 2-0 என வெற்றி பெற்றது. முதல் சுற்றில் ரியல்மாட்ரிட் அணி 3-0 என பொரிசியா டோர்ட்மன்ட்  அணியை தங்கள் மைதானத்தில் வைத்து வெற்றி பெற்றது. மொத்த கோல்களின் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்று அரை  இறுதிப்  போட்டிக்குத் தெரிவாகியது.

  Comments - 0

  • உமேஷ் ஸ்ரீனிவாசன் Monday, 14 April 2014 08:53 AM

    அரை இறுதியில் செல்சி அணி அத்லடிகோ மாட்ரிட் அணியையும், ரியல் மாட்ரிட் அணி நடப்பு சாம்பியன் பயேர்ன் மியுனிக் அணியையும் எதிர்கொள்ளவுள்ளன.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X