2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

பாகிஸ்த்தான் கிரிக்கெட் வாரியம் நெருக்கடியில்

Super User   / 2014 ஏப்ரல் 15 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்த்தான் சுழற்பந்து வீச்சாளர் தனிஷ் கனேரியா அவருக்க விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை மீறி போட்டிகளில் பங்கோற்றதன் காரணமாக பாகிஸ்த்தான் கிரிக்கெட் வாரியம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக கிரிக்கொட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிஷ் கனேரியா 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி போட்டியின் போது சகவீரரான ஸ்ட் பீல்டுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டே இவருக்கு ஆயுட்கால போட்டித்தடை விதிக்கப்பட்டது.

கடந்த 11ம் திகதி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நட்பு ரீதியிலான டுவெண்டி 20 கிரிக்கெட் போட்டியில்  பாகிஸ்தான் டெஸ்ட் வீரர்கள் சிலர் பங்கேற்றுள்ளனர். இப் போட்டியில் ஆயுட்கால தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர் தனிஷ் கனேரியாவும் விளையாடியுள்ளார்.

இத்தகவல் தெரியவந்ததையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

ஏற்கனவே சூதாட்டத்தில் சிக்கிய முகமது ஆசிப் நார்வே போட்டிகளில் பங்கேற்றதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்திருந்த  நிலையில், மீண்டும் ஒரு வீரர் கட்டுப்பாட்டை மீறியுள்ளார்.

இவ்விவகாரத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--