2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவி விலகினார்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் போல் பப்ரகாஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை இலங்கை கிரிக்கெட்டிடம் அவர் கையளித்துள்ளார். அவருடைய பதவிக்காலம் முடிய முன்னரே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் உப பயிற்றுவிப்பாளர் பதவி அவருக்கு கிடகிக்கும் நிலையில் உள்ளது. இதற்காகவே இவர் இந்த முடிவை எடுத்துள்ளார். "போல் பப்ரகாஸ் எடுத்த இந்த முடிவு அதிருப்தியை தந்தாலும், அவரின் முடிவு ஏற்புடையாதாக உள்ளது. தனது சொந்த நாட்டில் சொந்த அணியுடன் கூடிய சம்பளத்துடன் இணைந்து கொள்வது அவர் அவருக்கு சந்தோசமான விடயம். அதை அவர் செய்துள்ளார்" என இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இந்த பதவியில் இருந்து விலகியது தொடர்பாக இன்னமும் சட்ட நடவடிக்கை எடுக்கபப்டவில்லை என தெரிவித்த நிஷாந்த ரணதுங்க 6 மாத முன்னறிவித்தல் இன்றி திடீர் என விலகியமையினால் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அல்லது போல் பப்ரகாஸ் இலங்கை கிரிக்கெட்டுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். இவரின் இடத்தை தற்காலிகமாக மார்வன் அத்தப்பத்து எடுத்துக் கொள்வார் என எதிர்பார்கபப்டுகின்றது. 2011 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை அணிக்கு'இதுவரை 6 பயிற்றுவிப்பாளர்கள் கடமையில் ஈடுப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி அடுத்த 6 மாதங்களுக்கு தொடர்ச்சியாக போட்டிகளில் பங்குபற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .