2021 மே 12, புதன்கிழமை

இலங்கையை வென்றது சிம்பாப்வே

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் மஸகட்ஸாவின் அபாரமான சதத்தின் உதவியுடன் சிம்பாப்வே அணி வெற்றிபெற்றுள்ளது. 

உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதான பயிற்சிப்போட்டியொன்றில் இலங்கை, சிம்பாப்வே அணிகள் மோதியிருந்தன. இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றது. திமுத் கருனாரட்ன 58 ஓட்டங்களையும் ஜீவன் மென்டிஸ் 51 ஓட்டங்களையும் பெற்றனர். டில்ஷான், மத்யூஸ் இருவரும் துடுப்பெடுத்தாடியிருக்கவில்லை. சிம்பாப்வே அணியின் சீன் வீல்லியம்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 

பதிலளித்து விளையாடிய சிம்பாப்வே அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 

ஹமில்டன் மஸகட்ஸா ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களையும் ப்ரென்டன் டெய்லர் 63 ஓட்டங்களையும், சீன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர். நுவன் குலசேகர, சுரங்க லக்மால், டில்ஷான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். 

டேவ் வட்மோரின் பயிற்சியின் கீழ் செயற்பட ஆரம்பித்திருக்கும் சிம்பாப்வே அணி, காலநிலை காரணமாக கைவிடப்பட்ட முதலாவது பயிற்சிப் போட்டியிலும் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தி தடுமாறச்செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .