2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்துக் குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் கொண்ட குழாமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

3ஆவது போட்டியின் போது காயமடைந்து, நான்காவது போட்டியில் பங்குபற்ற முடியாத நிலைக்குள்ளான இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனுக்குப் பதிலதக, லியம் பிளங்கட், மார்க் ஃபூட்டிட் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனினும், மூன்றாவது போட்டியில் காயம் காரணமாகச் சேர்க்கப்பட்டிருக்காத மார்க் வூட்-க்குப் பதிலாகச் விளையாடிய ஸ்டீவன் ஃபின், அப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றதையடுத்து, ஃபூட்டிட், பிளங்கட் ஆகியோரோடு, மார்க் வூட்டும் நான்காவது போட்டியில் இறுதி இடத்துக்காகப் போராடவுள்ளார்.

தடுமாறிவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அடம் லைத்-க்கு, இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில், இங்கிலாந்து அணி 2-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குழாம்:

அலஸ்டெயர் குக், அடம் லைத், இயன் பெல், ஜோ றூட், ஜொனி பெயர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர், மொயின் அலி, ஸ்டுவேர்ட் ப்ரோட், ஸ்டீவன் ஃபின், மார்க் வூட், லியம் பிளங்கட், மார்க் ஃபூட்டிட், அடில் றஷீத்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .