2021 மார்ச் 01, திங்கட்கிழமை

நியூசிலாந்து வெற்றி

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி இலகுவான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.


ஹராரேயில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சிம்பாப்வே, ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சீகன்டர் ராஜா ஆட்டமிழக்காமல் 100, சமு சிபாபா 42, டினாஷே பனியங்காரா 33 என ஓட்டங்களைப் பெற, பந்துவீச்சில் இஷ் சோதி 3, கிரான்ற் எலியட் 2, மிற்சல் மக்லநகன், நேதன் மக்கலம் தலா ஒன்று என விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 42.2 ஓவர்களில் விக்கெட் எதனையும் இழக்காமல் வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் மார்ட்டின் கப்டில் 116, டொம் லதம் 110 என ஆட்டமிழக்காத ஓட்டங்களைப் பெற்றதோடு, இருவருமே இப்போட்டியின் நாயகர்களாகத் தெரிவாகினர்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .